ஒண்டிவீரனாரின் 252-வது நினைவு நாளை முன்னிட்டு ஆதி தமிழர் கட்சி நடத்தும் திராவிடம் காக்கும் மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நிறுவனத் தலைவர் ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அம்பேத்கர் விருது, தந்தை பெரியார் விருது, ஒண்டிவீரன் விருது வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவிற்கு வீர வாழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இதன்பின் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை ஆற்றுகையில்…
ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து முதல் முதலாக மாநாடு திருச்சியில் நடத்துகிறார்கள் அப்படி நடத்தப்படுகிற மாநாட்டிலே நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கு கலந்து கொண்டேன். ஜக்கையன் தலைமையில் இயங்குகிற இந்த இயக்கம் அரசியல் ரீதியாக பலம் பெற்று உங்கள் மூலமாக இந்த சமுதாய மக்களுக்கு நல்ல பணிகளை செய்வதற்கு நிச்சயமாக உங்களுக்கு துணையாக நாங்கள் இருப்போம் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் திமுக என்றாலே உங்களுக்கு வேற வேலை என்று கேலி கிண்டலை தாண்டி இன்று இளைஞர்கள் திராவிடம் காப்போம் என்று நீங்கள் வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்து இருக்கிறது.
ஆனால் பாரதிய ஜனதா ஆளுகின்ற கட்சியில் இருக்கிற மோடி, அமித்ஷா எப்படியாவது எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தை சீரழிக்க வேண்டும், அவர்களை விலைபேசி விட வேண்டும், அவர்கள் ஆட்சியை கலைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் பல மாநிலங்களில் அந்த ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த ஆட்டமும் நம்முடைய தலைவர் தளபதி அவர்களிடம் எடுபடவில்லை, அவர் எங்களுக்கு இந்த கொள்கை தான் முக்கியம் ஆட்சியை பற்றி எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி மூலமாக நாங்கள் பணியாற்றுவோம் என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த மேடையில் இருந்தவர்கள் பேசிய போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது திராவிட இயக்கத்திலே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் அவர்களைத் தொடர்ந்து இன்றைக்கு தமிழக முதலமைச்சரை பாராட்டி உங்களுக்கு துணையாக நிற்போம் என்று நீங்கள் சொன்னது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் உங்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம் தமிழ்நாட்டில் 35 இடங்களிலே யார் வெற்றிப்பட வேண்டும் என்பதை நீங்கள் நினைத்தால் தான் அவர்கள் வெற்றி பெற முடியும், நீங்கள் திராவிட இயக்கத்திற்கு திராவிட மாடல் ஆட்சிக்கு ஒட்டுமொத்தமாக ஆதரவை தருவீர்கள் என்றால் திமுகவை அசைக்க முடியாது, அதுமட்டுமல்ல நீங்கள் யாரை கை காட்டுகிறீர்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் இது சரித்திர சான்று, இந்த கட்சியை ஜக்கையன் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார் நான் ஒரு அறிவுரை சொல்வதாக நினைக்க வேண்டாம் யாரையும் இழிவாக பேச வேண்டாம் உங்களுடைய கொள்கைக்காக உங்களுடைய இனத்திற்காக உங்களுடைய சமுதாயத்திற்காக துணிந்து எல்லா வகையிலும் நீங்கள் போராடலாம். ஆனால் மற்றவர்களை சொல்லுகிற போது அது பொது வாழ்க்கைக்கு சரியாக இருக்காது,
தயவு செய்து வார்த்தைகள் மட்டும் விடாமல் தொடர்ந்து நீங்கள் பணியாற்றினால் நிச்சயமாக நீங்கள் இல்லாமல் தமிழ்நாட்டிலே யாரும் வெற்றி பெற முடியாது என்பதை நான் இங்கு அறிவிக்கிறேன். கலைஞர் அவர்கள் மூன்று சதவீத ஒதுக்கீடு உங்களுக்கு அளித்துள்ளார் அப்போது பலரும் இவர்களுக்கு எப்படி வழங்கலாம் என்று கேட்டபோது இல்லை இல்லை அவர்களுக்கு நான் தருவேன் என்று சொன்னார் அப்படி தந்தது மட்டும் அல்ல இன்று நம்முடைய தளபதி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக செல்வராஜ் அவர்களை மேலவை உறுப்பினராக உருவாக்கி தந்திருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் உங்களுடைய சமுதாயத்தை தனி கவனத்தோடு இருந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒண்டிவீரனாரின் 252-வது நினைவு நாளில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் இளைஞர்களை கொண்டு வந்திருக்கிறீர்கள் இது ஒரு சிறிய கூட்டம் மட்டுமல்ல மிகப் பெரிய அளவிலே இந்த அரசுக்கும் திராவிட இயக்கத்திற்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் உறுதுணையாக இருக்கப் போகிறது. நாங்கள் என்றைக்கும் உங்களுடைய முன்னேற்றத்தில் உங்களோடு நிச்சயமாக இருப்போம் என்று உறுதியளித்தார்…இந்நிகழ்வில் மாநில பொருளாளர் சேகர், மாநில துணை பொதுச்செயலாளர் எழில்துரை, மத்திய மண்டல செயலாளர் ஸ்ரீரங்கன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்..