திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் நெடுஞ்செழியன் தெரு பகுதியில் பிரான்சிஸ் டேவிட் என்பவருக்கு சொந்தமாக 6 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை 3,50,000/- மற்றும் 400000/- என 6 குடும்பத்தாருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒத்திகை பத்திரம் மூலம் ஒத்திகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் பிரான்சிஸ் டேவிட் தனது வீட்டின் மீது தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை மாத மாதம் செலுத்தி வந்தார் இந்நிலையில் சில மாதங்களாக தனியார் வங்கிக்கு பணம் செலுத்தாததால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வீட்டின் உரிமையாளர் பிரான்சிஸ் டேவிட் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை திடீரென தனியார் வங்கியை சேர்ந்த அதிகாரிகள் போலீசாருடன் வந்து ஒத்திகை வீட்டில் இருந்த குடும்பத்தாரிடம் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வீட்டில் இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி 6 வீடுகளில் 3 வீடுகளுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டு சென்று விட்டனர். மேலும் உள்ள 3 வீடுகளுக்கு வருகிற செவ்வாய்க் கிழமை வரை காலக்கெடு விதித்தனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒத்திகையில் இருந்த குடும்பத்தினர் போலீஸ் கமிஷனர் காமினிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பத்திரிக்கை யாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் நெடுஞ்செழியன் தெரு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 3,50,000/- மற்றும் 400000/- என வீட்டின் உரிமையாளர் பிரான்சிஸ் டேவிட்டிடம் பணம் கொடுத்து ஒத்திகைக்கு வந்தோம் ஆனால் எங்கள் பணத்தை திருப்பி தராமல் வீட்டின் உரிமையாளர் தலைமறைவு ஆகிவிட்டார் திடீரென தனியார் வங்கி அதிகாரிகள் எங்களை வீட்டை விட்டு வெளியே தள்ளி வீட்டிற்கு சீல் வைத்தனர் .
நாங்கள் கொடுத்த பணத்திற்க்கு என்ன வழி. வீட்டு உரிமையாளர் வங்கியில் பெற்ற கடனுக்கு நாங்கள் என்ன செய்வது நாங்கள் கொடுத்த ஒத்திகை பணம் யாரிடம் கேட்பது வீட்டு உரிமையாளர் எங்களை ஏமாற்றிவிட்டார், அவர் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கொடுத்த பணத்த திரும்பி எங்களுக்கு பெற்று தர வேண்டும் வீட்டை காலி செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும், என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர், எங்களுக்கு கால அவகாசம் கொடுத்து, பணத்தை பெற்று தர வேண்டும், இல்லை என்றால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் அதற்கு அரசு தான் காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது போன்ற நடவடிக்கை மனித உரிமை மீறல்கள் ஆகும் இந்த செயல் கண்டிக்கதக்கது வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வங்கி அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்து தெரிய படுத்திருக்க வேண்டும், இதுபோன்ற நடவடிக்கை. என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது, பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களுக்கு உரியை நீதியை பெற்று தர மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உதவிட வேண்டும் என்றும் மக்கள் உரிமை கூட்டனியின் மண்டல செயலாளர் காசிம் தெரிவித்தார்.