இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா வரவேற்புரை ஆற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது மகளிரணி மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் திருச்சி ரபீக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, முஹம்மது இலியாஸ் மாவட்ட பொருளாளர் கள் ஹுமாயூன் கபீர், காஜா மொய்தீன் உள்ளிட்ட மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், பகுதி கழக, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.