எல்ஐசி முகவர்களின் கமிஷன் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள எல்ஐசி மத்திய கிளை அலுவலகம் முன்பு தலைமையில் ஏராளமான எல்ஐசி முகவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு யூனிட் தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமை தாங்கினார், துவக்க உரையை மூத்த தலைவர் கருணாநிதி உரையாற்றினார். இதில் திருச்சி யூனிட் தலைவர் பொன் வேலுச்சாமி,திருவெறும்பூர் நிர்வாகி ராஜேந்திரன் கண்டோன்மென்ட் நிர்வாகி திருநாவுக்கரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட எல்ஐசி 5 கோடி முதலீட்டில் இந்திய அரசாங்கம் LIC யை உருவாக்கிய போது பல்வேறு நெருக்கடிகள் சந்தித்த காலகட்டத்தில் முகவர்களின் ரத்தத்தாலும், வேர்வையாலும், உழைப்பாலும், உருவான எல்ஐசிஐ இன்று 5 லட்சம் கோடி சொத்து இருக்கிறது. இந்த நிறுவனம் உலக அளவில் முன்னேறுவதற்காக அர்ப்பணித்த முகவர்களின் கமிஷனை இன்று ஒன்றிய அரசு குறைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே கமிஷன் குறைப்பு விஷயத்தை LIC நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தோம். இதற்கும் எல்ஐசி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசு செவி சாய்க்க வில்லை என்றால் இன்னும் வரும் காலங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல்களில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.