திருச்சி உய்யகொண்டான் கிளையான தஞ்சை ரோடு பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால்கள் கடந்த பல வருடங்களாக குப்பைகள் நிரம்பி வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தன.இதன் காரணமாக மழைக்காலங்களில் உய்யக்கொண்டான் ஆற்றுப்பகுதியில்வரும் தண்ணீர் கழிவுநீர் கால்வாய் வழியாக வீடுகளுக்குள் புகுந்து மக்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வந்த நிலையில் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இரட்டை வாய்க்காலில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.