குருவை சாகுபடி பாதுகாத்திடவும் , சம்பா சாகுபடி தொடங்கிடவும், காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சட்ட ரீதியான தண்ணீரை திறந்து விட ஒன்றிய அரசும், உச்ச நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்டம் காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் அயிலை சிவசூரியன், நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு தொகுதி மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த தொடர் முழக்க போராட்டத்தை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி துவக்கி வைத்து பேசினார். இந்த தொடர் முழக்கப் போராட்டத்தின் கோரிக்கைகளாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி
கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை மாதா மாதம் வழங்க ஒன்றிய அரசு காவிரி ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் கர்நாடக அரசு மறுத்தால் கர்நாடகத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரிப்படையை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்