இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த பன்முகக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், திருச்சியை தலைமை இடமாக கொண்டு பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் அமைப்பு செயல்பட்டு வருகிறது, அமைப்பின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர், அந்த வகையில் இன்று திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் நலிந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கை கொண்ட மனு ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில், நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
கோரிக்கை மனுவில்.:- வீடு இல்லாத நலிந்த கலைஞர்களுக்கு அரசு தரப்பில் கட்டப்படும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும். கலை பண்பாட்டு துறையில் நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மூக்கு கண்ணாடி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட மிக முக்கிய சலுகைகளை கால தாமதம் இன்றி உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்படும் விளம்பரம் மற்றும் ஆவணப் படங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்களை பயன்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும்
நாடகக் கலைஞர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 3,000 தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அரசு உயர்த்தி தர வேண்டும். 5.மத்திய அரசு சார்பில் நாடகக் கலைஞர்களுக்கு ரூபாய் 5,000 ஓய்வூதியம் வழங்கியதை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளையும் நலிந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்படுத்து வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம். என்று குறிப்பிட்டு இருந்தது.