அனைத்து கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பினர் இன்று திருச்சி காஜாமலையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் தமிழரசன் தலைமையில் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு கல்லூரியில் பணியாற்றும் கௌரவ வரி ரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது, கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எழுத்து தேர்வு என்று நேர்முகத் தேர்வு நடத்தி பணி நிரப்பப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிபுரிய அனுபவம் முக்கியம் என்பதை உணர்ந்து அப்போதி முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கடந்த 2007, 2008, 2011 ஆகிய காலங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மட்டும் எழுத்து தேர்வு இன்றி கல்வி தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்காணல் முறையில் பணி நியமனம் செய்தார். அதே போல எழுத்து தேர்வின்றி உதவி பேராசிரியர் பணி வழங்கிட உயர் கல்வித் துறைக்கு முதல்வர் அறிவுரை வழங்க வேண்டும், அதே போல் கலைஞர் ஆட்சியில் உயர் கல்வித் துறையில் கொண்டு வந்த அரசு அணையின் 412 உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.