திருச்சி கல்மந்தை காலனி பகுதியில் திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அரசாங்கம் சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது அதன் பிறகு அந்த வீடுகள் பழுதடைந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் அமைத்து குடியிருந்த மக்களுக்கு அந்த வீடுகள் அனைத்தையும் அகற்றி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வழங்கப்படும் என கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக பணி துவங்கப்பட்டு தற்பொழுது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கல் மந்தை காலனி பகுதியில் வசித்த மக்களுக்கே குடியிருப்பினை வழங்கிட வேண்டும்.
வாடகை வீட்டில் குடியிருந்து வரக்கூடிய சூழலில் உடனடியாக வீடுகளை வழங்கிட கேட்டு பலமுறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தும் வீடுகளை வழங்காத நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அதிகாரிகளை கண்டித்து இன்றைய தினம் கல் மந்தை காலனி ஊர் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தை ஒட்டி உடனடியாக காவல்துறை உதவி ஆணையர் மற்றும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் அதிகாரிகள் போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி பேச்சு வார்த்தையின் அடிப்படையில் உரிய பயனாளிகளின் பெயர் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடுவது என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் குடியேறும் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது இப் போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா , மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச் செல்வன் பகுதி செயலாளர் பா. லெனின், பகுதிக்குழு உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர் அந்தப் பகுதியில் குடியிருந்து வீடுகளை இழந்துள்ள கல்மந்தை காலனி பகுதி மக்களுக்கு முறையாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் அப்படி இல்லையெனில் மீண்டும் மக்களை திரட்டி பெரிய அளவிலான போராட்டத்தை எடுப்போம் என தெரிவித்துள்ளனர்.