தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருச்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஜார் மைதீனுக்கு, தமிழக பொறுப்பாளர் நஜ்முல் ஹாமர் இஸ்லாம், மாநில துணைத் தலைவர் முகம்மது முகைதீன், மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு (எ) லெனின் பிரசாத் மற்றும் மாநில தலைவர் பாரத் யாத்திரை ஜனாப் முகமது ஆரிப் ஆகியோர் பரிந்துரையின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் இம்ரான் பிரதாப் கர்த்தி இந்த பொறுப்பை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு (எ) லெனின்பிரசாத், மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் முகமது மொய்தீன், வணிகர் சங்க பேரவை எஸ்.பி.பாபு, மாவட்ட பொருளாளர் முரளி

மற்றும் சுக்ரூதீன், வெல்லமண்டி பாலு, கள்ளத்தெரு குமார், வெங்கடேஷ் காந்தி, தர்கா சேக் இப்ராஹிம், லால்குடி சரண், சிந்தை ஶ்ரீராம், உறையூர் இர்ஃபான், தென்னூர் பக்ரூதீன், ஹஜ்ரத் ஜீயபுரம் அப்பாஸ் அலி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொறுப்பு வழங்கிய காங்கிரஸ் மேலிடத்திற்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் புதிய தலைவர் பஜார் மைதீன் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *