தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் சத்தியநாதன், பூக்கடை பண்ணீர், அன்பு ஆறுமுகம், ஆடிட்டர் சுரேஷ், பாலமுருகன் கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, பஞ்சப்பூர் கோட்ட தலைவர் மணிவேல், சுப்பிரமணியப்புரம் கோட்ட தலைவர் எட்வின்,அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், வீரய்யா, ஐடி பிரிவு கிளமெண்ட், மாணவர் காங்கிரஸ் நரேன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், கலை பிரிவு அருள், என்ஜிஓ பிரிவு திரு கண்ணன், டிசிடியு பிரிவு கிஷோர், தங்கவேலு, இந்திரா பெலோஷிப் பிரிவு மாரிஸ்வரி,புனிதா, சுந்தரி, வார்டு தலைவர்கள் ரஃபிக், சம்பத், பெல்ட் சரவணன், அறிவாஸ் கோவன், பாலு, வாசுதேவன், பாபு, இஸ்மாயில், அப்துல் மகித், விஜய் பக்தன், பாண்டியன், ஜாபர், அனந்த பத்ப நாதன், அப்துல், விமல்ராஜ், ஜாஹிர் உசேன், செல்வராஜ், மூர்த்தி, இப்ராஹிம்,வளன் ரோஸ், எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.