மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல். கிஷோர் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்த கர்மவீரர் காமராஜர் போன்ற மகான்களை பற்றி திருச்சி சிவா அவர்களின் பேச்சு கண்டனத்திற்குறியது. காட்டிலும், மேட்டிலும் மக்களுக்காக போராடிய பெருந்தலைவர் காமராசருக்கு ஏசியெல்லாம் ஒரு தூசு என்பதை திருச்சி சிவா போன்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பேச்சை மட்டுமே தனது தகுதியாக வைத்துள்ள திருச்சி சிவா போன்றோர்களின் விளக்கத்தையெல்லாம் ஏற்றுகொள்ள முடியாது. திமுக தலைமை திருச்சி சிவா மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.