கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய விஜயகுமார்( வயது 40) திருச்சி அப்போலோ மருத்துவமனையில் கடந்த மார்ச் 10ம் தேதி சேர்க்கப்பட்டார். அவரின் கை மற்றும் கால்களில் பெரும்பகுதி வெந்து போயிருந்தது. உடலெங்கும் காயங்கள் இருந்தன. இடுப்பையும் கழுத்தையும் அசைக்க முடியாத நிலையில் இருந்தார். காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கழுத்து எலும்பு முறிந்து இருப்பதும், முன் மூளையில் ரத்தக் கட்டுகள் இருப்பதும் தெரிய வந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகளில் இடது கை எலும்பு, இடது இடுப்பு எலும்பு, இடது தொடை எலும்பு ஆகியவற்றில் முறிவு இருப்பது தெரிய வந்தது. மேலும் கல்லீரல் பாதிப்பு காரணமாக இரத்த உறையும் தன்மை குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பும் இருந்தது. பின்னர் ரத்த அழுத்தமும் சுவாசமும் ஓரளவு சீரான பின்னர் இடது தொடை எலும்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை டாக்டர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் அருண் கீதையன் குழுவினர் மேற்கொண்டனர்.
அது மட்டுமல்லாமல் தீக்காயங்களில் கரும் பூஞ்சை வளர்ச்சி கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள டாக்டர்கள் பரணிதரன், விக்னேஷ் முத்து வெங்கடேஷ், குமார் சிறுநீரகப் பிரிவு மருத்துவர் பாலமுருகன் கிருமி தொற்று சிகிச்சை நிபுணர் வசந்த் ஆகியோரின் தொடர் முயற்சிகளுக்கு பின்னால் நோயாளி ஓரளவுக்கு தொற்றிலிருந்து தேறியுள்ளார். கடைசியாக கழுத்து எலும்பு முறிவுக்கான சிகிச்சை டாக்டர்கள் மயிலன், கெவின், ஜோசப் குழுவினரால் வெற்றிகரமாக நடந்தது இதை எடுத்து 6 வாரங்களுக்கு பிறகு விஜயகுமார் உட்கார வைக்கப்பட்டார். மரணத்தின் விளிம்புக்கே சென்ற அவரை அப்போலோ மருத்துவ குழுவினர் காப்பாற்றி விட்டதாக விஜயகுமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின்போது திருச்சி அப்பல்லோ ஆஸ்பத்திரி நிலைய தலைவர் சாமுவேல் கூறும் போது, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சாலை விபத்துகள் இருதய அவசர நிலைகள் பக்கவாதம் அல்லது விஷம் போன்ற எந்த ஒரு அவசரத்தில் கையாளுவதற்கு போதுமான படுக்கை கட்டமைப்பு வசதிகள் இங்கு உள்ளன என்றார். இதில் மருத்துவ அதிகாரி சிவம், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் , துணைப் பொது மேலாளர் சங்கீத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.