திருச்சி மாநகர் முழுவதும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வந்தது. ஆனால் இன்று மாலை 4 மணி முதல் மிதமான குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதைத் தொடர்ந்து 5மணிக்கு திருச்சி மாநகரில் மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம் , மத்திய பேருந்து நிலையம், டிவிஎஸ் டோல்கேட், விமான நிலையம், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் ஒரு மணி நேரமாக விடாமல் மழை பெய்தது. இதனால் காலை முதல் வெயிலின் தாக்கத்தை மட்டுமே அனுபவித்த மக்கள் திடீரென்று மழை பெய்ததால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். திருச்சி மாநகரமே குளிரும் அளவிற்கு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.