மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போல் தமிழக அரசு செயலியை (App) உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 9000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், மானிய விலையில் பெட்ரோல், டீசல், கேஸ் வழங்கிட வேண்டும், காவல்துறை ஆன்லைன் அபராதம் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நடராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.