தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர்கள் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், அய்யாக்கண்ணு, ராஜேந்திரன் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிற குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 6000-த்தை பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணைக்கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவோம்.
தமிழகத்திற்கு காவிரியில் தினசரி நீர் பங்கிட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்ற வாக்குறுதியை விவசாயிகளுக்கு வாக்குறுதியாக தர வேண்டும்.விவசாயிகளின் எதிர்பார்ப்பான ஆதாய விலை என்ற வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.தமிழகத்தில் உள்ள நீர் தேக்க அணைகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும்.விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பயிர்காப்பீட்டில் புதிய கணக்கிட்டு முறையை கொண்டு வர வேண்டும்என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.