மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு. அந்த நீர் முக்கொம்பூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சம்பா குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இரு கறைகளை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் 36 வது நாளாக மத்திய அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மேல சிந்தாமணி காந்தி படித்துறை அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் ஒன்றரை அடி நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவேரி ஆற்றில் முதலை இருப்பது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.