காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் புதிதாக மணல் குவாரி  அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் – திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் சாமானிய மக்கள் நலக்கட்சியினர் மனு அளித்தனர்.

காவிரி,கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் 16 இடங்களில் லாரிகளுக்கான மணல் குவாரிகளும், 21 இடங்களில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரிகளும் செயல்படுத்த இருப்பதாக கடந்த ஜனவரியில் தமிழக அரசின் நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், காவிரி அணைக்கட்டு விவசாயிகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் ஆகியோரது கருத்துக்களை கேட்டறியாமல் வணிக நோக்கில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருப்பது ஆறுகளின் இயற்கை அமைப்பின் மீதும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ஆகவே காவிரி கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் மணல் குவாரி அமைப்பதற்க்கான நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட ஏதுவாக தமிழக அரசிற்க்கு கருத்துரு அனுப்பி தமிழகத்தின் இயற்கை வளங்களை காக்க வேண்டும் என சாமானிய மக்கள் நலக்கட்சியின் சார்பில் செயலாளர் குணசேகரன் தலைமையில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப் பிரிவு தலைமை பொறியாளரை சந்தித்து மனு அளித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *