விஷ்வ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் காவேரி மேம்பாலம் பணியை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகும் இந்த திருக்கோவிலில் வருகிற மார்ச் 12ஆம் தேதி பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த பூச்சொரிதல் விழாவிற்கு தமிழக முழுவதும் இருந்து திரளான பக்த கோடிகள் திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு நடை பயணமாக வர உள்ளனர். இந்நிலையில் காவிரி மேம்பாலம் பழுதடைந்து உள்ளதால் அனைத்து பக்தர்களும் புறவழிச் சாலை பயன்படுவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் மேலும் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகமாக ஏற்படும் இது பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் தேவையற்ற இடையூறுகளையும் இன்னல்களையும் ஏற்படுத்தும் எனவே இதனை பரிசீலனை செய்து
காவிரி மேம்பால பணிகள் அனைத்தையும் துரிதமாக போர்க்கால அடிப்படையில் சீரமைத்து உடனடியாக காவிரிப் பாலத்தை திறக்க ஏற்பாடு செய்யக்கோரி மனு அளித்தனர். இதில் துணைத் தலைவர்கள் வாளாடி சங்கர், யுவராஜ், மாவட்ட இணை செயலாளர் கோபாலன், மாநில அலுவலக செயலாளர் சிவராஜ், பிரகண்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர்கள் சுந்தர்ராஜன், ரமேஷ் பொருளாளர் ஆனந்த பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.