தினசேவை அறக்கட்டளை சார்பில் திருச்சி மாவட்டம் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கபசூர குடிநீர், முககவசம் மற்றும் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் போச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் நடிகருமான தாமஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து, கபசுர குடிநீர் குடித்து இந்த நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் கணேசபுரம் வார்டு உறுப்பினர் அழகேசன், (தாய் தேசம் அறக்கட்டளை) ஹேப்ஸி சத்ய ராகினி, கிருபா சங்கர், தினசேவை அறக்கட்டளை குழுவினர்கள் அல்லிக்கொடி, சுமதி, பகவதி, ஜான், ஸ்ரீதர், நீலாவதி, சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கி கொரோணா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation