கடந்த 2019-ஆம் ஆண்டு மோடி பெயர் குறித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள குஜராத் உயர் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த உயர்நீதி மன்ற தீர்ப்பை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் திருச்சி அருணாச்சல மன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும் பிஜேபியை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் சுஜாதா , ரெக்ஸ், காங்கிரஸ் கட்சியினர் , வர்த்தக காங்கிரஸ் அணியினர் , இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.