தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் கோரிக்கையான விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை, விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி நீரினை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், மேதாட்டு அணையை கட்டுவது தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 37வது நாட்களாக தொடர்ந்து பல்வேறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குறவர்கள் இன மக்களுக்கு விவசாயம் செய்வதற்காக பெரம்பலூர் மாவட்டம் ஏறையூர், திருச்சி மாவட்டம் தேவராயநேரி உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்ட இடத்தை உடனடியாக மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி குறவர் இன மக்களுக்கு ஆதரவாக இன்று விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.