குறைந்தபட்ச ஊதியம் அமலாக்கப்பட வேண்டும், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறை கைவிடப்பட வேண்டும்,பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், முதலாளிகளின் அழுத்தத்துக்கு தொழிலாளர் துறை அடிபணிகிறது. ஒன்றிய அரசு முன்வைத்து இன்னும் நிறைவேற்றப்படாத நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், நடைமுறையில் மாநில அரசின் தொழிலாளர் துறை செயல்படுத்தி வருகிறது.
தொழில்துறையில் முன்னணியில் இருப்பதைப் போலவே, தொழிலாளர் நலன் காப்பதிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்த நிலை படிப்படியாக கீழ் இறங்குவது வருந்தத்தக்கது. இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அவசரமான அவசிய கடமையாகும் …இதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க, அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மையங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்திய மாதர்தேசியசம்மேளன மாநில தலைவர் மஞ்சுளா தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளர். இந்திரஜித்விளக்க உரையாற்றினர். ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவர் ஜனசக்தி உசேன் மாவட்டச் செயலாளர்கள் முருகன், லோகநாதன் மற்றும் சுரேஷ் முத்துசாமி உள்ளிட்டோரும் உரையாற்றினர். இறுதியாக ஆட்டோ முருகேசன் நன்றி கூறினார்.