பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே என் அருண் நேரு குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர் பேரூராட்சி கணேசபுரம் கடலூர் குளித்தலை ஒன்றியம் வைப்புதூர் சத்தியமங்கலம் கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியம் மலையாண்டி பட்டி குள்ளரங்கம்பட்டி தோகைமலை மேற்கு ஒன்றியம் சுக்கம் பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து தோகைமலை கிழக்கு ஒன்றியம் முதலைப்பட்டி கீழமேடு பகுதிகளில் மாட்டு வண்டியில் சென்று பொதுமக்கள் விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பெண் தொழிலாளர்கள் வேட்பாளர் அருண் நேருவிடம் பூ பறிக்கும் போது விஷப்பாம்புகள் கடித்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது எனவே பூப்பறிக்கும் தொழிலாளர்களுக்கு காப்பீடு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதை ஏற்றுக் கொண்ட வேட்பாளர் அருண் நேரு தான் வெற்றி பெற்று பின் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தார்.