திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற ஆடி அமாவாசையை முன்னிட்டு திதி கொடுக்கும் மக்கள் அதிகம் கூடியதால், அங்கு பெண்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நிலையில், அது குறித்த தகவல் அறிய பெற்று, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தலைமையில் குழந்தைகள் நலக்குழு, மாநகர/மாவட்ட காவல் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவினர் மற்றும் குழந்தை உதவி மையம் -1098ன் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டு முற்பகலில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியிலும், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்த காரணத்தினால் அங்கும் இரவு முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் மேற்கொண்ட களஆய்வில், பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து கொண்டிருந்த சூழ்நிலையில் மீட்கப்பட்டு. குழந்தைகளுக்கான மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய மறுவாழ்வு நடவடிக்கைகள்
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தாலோ. குழந்தைகள் வாயிலாக பிச்சை எடுக்க வைத்து வருமானம் காணும் நபராக இருந்தாலோ. அதற்கு பெற்றோர்/பாதுகாவலர்கள் உடந்தையாக இருந்தாலோ, இளைஞர் நீதிச் (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015, பிரிவு 76-ன் படி, 5 வருட முதல் 10 வருடம் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம். எனவே குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுத்தல் என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இனிவரும் காலங்களில் இச்செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.