குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் தமிழ்நாட்டில் சேர்ந்த ஏழு தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் இன்று குவைத்தில் இருந்து ராணுவ விமான மூலம் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து உடல்கள் அனைத்தும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் நவல்பட்டை சேர்ந்த ராஜு என்பவர் உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி இறந்த ராஜுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி உதவிக்கான காசோலையை ராஜுவின் குடும்பத்தினரிடம் வழங்கினார். அதனை அடுத்து குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடன் நவல்பட்டு பர்மா காலணியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் ஊருக்கு வருவதாக இருந்த ராஜு தீ விபத்தில் சிக்கி உயிரற்ற உடலாக வந்தது. அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் நவல்பட்டு பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்