தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் தலைமையில் அனைத்து கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட செயலாளர் டிவி கணேஷ், தொழிற்சங்கம் திருப்பதி, பொருளாளர் மில்டன் குமார், பகுதி செயலாளர் அருள்ராஜ், வட்டச் செயலாளர் செந்தில்குமார், இமானுவேல், கோபாலகிருஷ்ணன், அகஸ்டின் நிக்கோலஸ் , திமுக சார்பில் மாமன்ற உறுப்பினர்கள் தர்மராஜ் , ரமேஷ், அதிமுக பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம், வட்டச் செயலாளர் நாகராஜ், காங்கிரஸ் பகுதி செயலாளர் எட்வின், பாரதிய ஜனதா கட்சி பாலகுமார்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொன்னுதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கார்த்திகேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சேகர், தமிழக வெற்றி கழகம் கணேஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்ணன், நாம் தமிழர் ரியாஸ் கான், அகில பாரத இந்து மகாசபா மணிகண்டன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும் பகுதி செயலாளர்கள் பட்ட கழக செயலாளர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.