சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரும்,, கேரளா முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் உடல் நலக்குறைவால் கடந்த ஞாயிறு அன்று காலமானார். இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றி செல்வம் தலைமையில் அனைத்து கட்சியினர் மௌன அஞ்சலி ஊர்வலம் திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸில் இருந்து துவங்கி மரக்கடையில் நிறைவடைந்தது.
மரக்கடையில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஸ்ரீதர், மூத்த இந்துராஜ், மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக், திமுக மாநகர செயலாளர் மதிவாணன், சிபிஐ மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் சுரேஷ்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தமிழாதன், புல்லட் லாரன்ஸ், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது ராஜா, சிபிஐ எம்எல் மாவட்ட செயலாளர் ஞான தேசிகன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்