தமிழ்நாடு அரசு நர்சுகள் பொதுநலச் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இதில் கௌரவ செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார் . இதில் பல்வேறு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள், எம்ஆர்பி செவிலியர் சங்கத்தினர் என பல அரசு செவலியர்கள் கலந்து கொண்டனர் .தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கௌரவ செயலாளர் லீலாவதி: எம்ஆர்பி செவிலியர்களை ஒப்பந்தமுறையில் பணியாற்ற தமிழக அரசு தேர்வு செய்ததற்கு கண்டணம் தெரிவிக்கப்பட்டது மேலும் நீண்ட காலம் போராடும் அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யவேண்டும். 6வது ஊதியக்குழுவில் பறிக்கப்பட்ட கிரேடு-3 செவிலியர் கண்காணிப்பாளர் பணியை மீண்டும் வழங்கவேண்டும், மேலும் செவிலியர் ஊதிய முரண்பாடுகளை அரசும், சுகாதாரத்துறையும் களையவேண்டும்
அரசு மருத்துவமனைகளில் நிலவிவரும் செவிலியர் பற்றாற்குறையைப் போக்க கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் மேலும் செவிலியர் பணியிடங்கள் உருவாக்கி பணியிடங்களை பூர்த்திசெய்யவேண்டும் என அரசுக்குகோரிக்கை விடுத்தனர். தேர்தல்நேரம் என்பதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையென்றால் தேர்தல் முடிந்து அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கைவிடுத்தனர். மேலும் கொரோனா காலத்தில் உயிரிழந்த செவிலியர்களுக்கான இழப்பீடு மருத்துவத்துறை நிர்வாகத்தினால் சரிவர வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர் .