தமிழகத்தில் கோடை வெப்பம் தொடங்கியதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது, மேலும் இனி வருடம் தோறும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு அவர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின்பேரில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி இன்று முதல் துரை பிரகாரத்தில் கட்டணம் மில்லா வரிசையிலும், கொடி மரம் அருகில் கட்டண தரிசன வரிசையிலும் ஆக சுமார் 5000 பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் (இஞ்சி, கறிவேப்பில்லை , கொத்தமல்லி , பச்சைமிளகாய் ,பெருங்காயம் , உப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது ) கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இணை ஆணையர் மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார் உடன் கண்காணிப்பாளர் கோபலகிருஷ்ணன் , உதவி மேலாளர் சண்முகவடிவு அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.