திருச்சி பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பரமசிவம் தெருவில் ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. கோவிலானது மெயின் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்கு அப்பகுதியில் சுற்றியுள்ள ஏராளமான மக்கள் தினம்தோறும் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று காலை அங்கு சாமி கும்பிட வந்தவர்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த தகவல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்து அவர்களும் கோவிலுக்குள் உள்ளே சென்று பார்த்த பொழுது கோவிலில் பெரிய உண்டியல் மற்றும் சிறிய உண்டியல் ஆகிய இரண்டு உண்டியல்களும் காணாமல் போனது தெரிய வந்தது. அதில் 5000 ரூபாய் பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கருவறைக்குள் சென்று பார்த்த பொழுது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த அரை பவுன் தங்க செயினும் காணாமல் போனது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து பொன்மலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அந்த இடத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த பொழுது கோவிலில் இருந்த பெரிய உண்டியல் கோவிலுக்கு எதிர் புறம் உள்ள ஒரு இடத்தில் கிடந்ததை பார்த்தனர். மேலும் அந்த உண்டியலையும் கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் நள்ளிரவில் 2 மணி அளவில் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பேச்ச சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது