திருச்சி சங்கம் ஹோட்டல் 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் பிறகு இந்த குழுமம் தஞ்சாவூர், மதுரை மற்றும் செட்டிநாடு நகரங்களில் தனது செயல்பாட்டை விரிவாக்கியது. தற்போது திருச்சி மற்றும் மதுரையில் உள்ள ஹோட்டல்கள் கோர்ட்யார்ட் மேரியாட் பிராண்டின் கீழ் செயல்படுகின்றன. இந்நிலையில் சங்கு சக்ரா ஹோட்டலின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இக்குழுமம் அதன் அனைத்து ஹோட்டல்களிலும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை திட்டமிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தனது அறை எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரிக்க நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் ராமேஸ்வரத்தில் தனது நிர்வாகத்தை விரிவாக்குவதற்கும், திருச்சியில் மேலும் ஒரு ஹோட்டலை சேர்ப்பதற்கும் தயாராக உள்ளது.

இந்நிலையில் திருச்சியில் உள்ள சங்கம் ஹோட்டலில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் வி.வாசுதேவன் பேசுகையில்… சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் திருச்சியில் அமைந்துள்ள ஒரு குடும்ப நிறுவனமாகும். கடந்த 50 வருடங்களாக விருந்தோம்பல் தொழிலில் செயல்பட்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் எங்கள் பொன் விழா ஆண்டை கொண்டாடுகிறோம். எங்கள் மதிப்புமிக்க விருந்தினர்களுக்காக எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். நிறுவனம் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்பதற்கும் தொடர்ச்சியாக பயணிப்பதற்கும் அவர்கள் தான் உண்மையான காரணம். எங்கள் வளர்ச்சியை எளிதாக்கிய சிட்டி யூனியன் வங்கிக்கு நன்றியை தெரிவிக்கிறோம். வருங்காலங்களில் நாங்கள் மேலும் விருந்தினர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சேவையாற்ற விரும்புகிறோம். இந்த சிறப்பான நிகழ்வின் போது இந்த நிறுவனத்தின் முந்தைய நிறுவனர்கள் மற்றும் இயக்குநர்களின் பங்களிப்புகளை நினைவுகூர விரும்புகிறோம் என்றார்.

தொடர்ந்து செயல் இயக்குனர் முரளிகிருஷ்ணன் பேசுகையில்,… 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்க இந்த மைல்கல்லுக்கு எங்களை கொண்டுவரும் பந்தகால் பயணத்தை நினைவுகூர விரும்புகிறோம். எங்கள் மதிப்புகள் வாக்குறுதிகள் மற்றும் உறுதிபடுத்தல்களை நிறைவேற்றுவதற்காக முக்கியமான பங்கு வகித்த எங்கள் நலம் விரும்பிகள் மற்றும் விற்பனையானர்களுக்கும் நன்றியை கூறுகிறோம். எங்கள் பாரம்பரியத்தில் நாங்கள் பெறுமிதம் கொள்வதுடன் எதிர்காலத்தைப் பற்றி மேலும் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து புதுமைகள் செய்வதோடு, சிறந்த அனுபவங்களை வழங்குவதற்கான மேற்கொண்ட உறுதி எங்கள் செயல்களில் மையமாகவே இருக்கும் என்றார்.

தொடர்ந்து குழும பொது மேலாளர் ரவி பிள்ளை பேசுகையில்,… கடந்த 50 ஆண்டுகளில், எங்கள் நிறுவனம் கனிசமாக வளர்ந்துள்ளது. எங்களது அசாத்தியமான செயல்திறன் மிக்க குழுவின் அர்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடுமையான உழைப்பிற்கும், எங்கள் விசுவாசியான விருந்தினர்களின் ஆதரவும் இதற்குக் காரணம். இந்த ஆண்டு விழா, நாங்கள் வணிகத்தில் இருந்த கால அளவுக்கென்று மட்டும் அல்ல, நாங்கள் கட்டிய உறவுகள், உருவாக்கிய நினைவுகள் மற்றும் எங்கள் வரவேற்பின் சுவடுகள் பற்றியது. ஒரு பொறுப்பான நிறுவனமாக, குழுமம் விருந்தினர்களின் அனுபவங்களை மேம்படுத்தவும் சமூக பொறுப்புணர்வைப் விதைக்கவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எங்கள் அனைத்து ஹோட்டல்களிலும் சில முக்கியமான நடைமுறைகள் முயற்சிகளை செயல்படுத்தியுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்