சட்டமேதை அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தியா முழுவதும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், இளம் சிறுத்தைகள் பாசறை மாநில துணைச் செயலாளர் அரசு, பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் பில் சந்திரசேகரன், மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.