திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம் , உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் பக்தி பரவசத்துடன் கொடி யேற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். விழாவில் பிப்.3ம் தேதி தெப்பத் திருவிழாவும்,
பிப். 4ம் தேதி திருக்கோயிலிருந்து அம்மன் கண்னாடி பல்லக்கில் புறப்பாடும், தொடர்ந்து இரவு வடதிருக்காவேரி கரையில் அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும் ,பிப்.5 ம் தேதி மஹா அபிஷேகத்துடன் வழி நடை உபயங்களை கண்டருளிகிறார். இந்நிகழ்வில் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.