திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உலக புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தெப்பக்குளத்தில் இருந்து கிளம்பி அக்னி சட்டி, பால்குடம், குழந்தையை தொட்டிலில் வைத்து சுமந்து செல்வது என இங்கிருந்து தான் புறப்பட்டு செல்வார்கள்.சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் இந்த தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளம் ஆழமாக இருப்பதால் பக்தர்கள் யாரும் குலத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. அதனையும் மீறி சில பக்தர்கள் தெப்பக்குளம் உள்ளே இறங்கி குளிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இரண்டு சடலங்கள் தெப்பக்குளத்தில் மிதந்தது.இந்த இரண்டு சடலங்களும் யார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. இவர்கள் இருவரும் எப்பொழுது தெப்பக்குளத்தில் இறங்கினார்கள் எதற்காக இங்கு வந்தார்கள் என்பது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. உயிரிழந்த நிலையில் மிதந்த இரண்டு உடல்களில் ஒருவர் காக்கி சட்டை அணிந்திருந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது மேலும் சட்டை இல்லாமல் மற்றொருவர் உடல்கள் மீட்கப்பட்டது. இது குறித்து சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் உதவி ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு உடல்களும் மீட்கப்பட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் தெப்பக்குளத்தில் இரண்டு உடல்கள் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *