திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருச்சி மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வை துவக்கி வைத்தவர்கள் மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு தலைவர் தர்மராஜ் மற்றும் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தனர் மற்றும் இந்த நிகழ்வுக்கு மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்தி, ஜெயராம்நகர் பழனியப்பன், பிரகாஷ் நகர் ராஜீ, ஆட்டோ முத்துகுமார் ஆகியோர்கள் இந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.