திருச்சி மாநகர் மாவட்ட கழக, அதிமுக தில்லைநகர் பகுதி கழகம் சார்பில், பாரதி நகர் நண்பர்கள் குழு ஏற்பாட்டில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
உடன் பகுதி கழக செயலாளர்கள் முஸ்தபா, அன்பழகன் மற்றும் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.