ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “அமைதியும் வளர்ச்சியும்” – என்ற கருத்தில் உலக அறிவியல் தினத்தை பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக 22ம் தேதி மற்றும் 23ம் ஆகிய இரு தினங்களில் கொண்டாடியது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு திறன்சார் போட்டிகள்,புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள், அறிவியல் மாதிரிகள் தயார் செய்யும் போட்டிகள், வினா வினாடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் தலைமையேற்க பத்மஸ்ரீ டாக்டர் வாசுதேவன், மதுரை பொறியியல் கல்லூரி வேதியியல் துறைபேராசிரியர் தியாகராஜர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாகக் கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சிறப்பியல்புகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் தனித்தன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறினார். கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை வாழ்த்தி மாணவர்களிடையே ஆக்கப்பூர்வமான அறிவியல் சிந்தனைகள் மேம்படவேண்டும் என்றும் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாணவர்கள் படைப்புத்திறன் கொண்டவர்களாகத் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார. இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டத்திலிருந்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.