சர்வதேச ஆடிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரோட்டரி சார்பில், மாநகராட்சி தேவி நடுநிலை பள்ளி ஸ்ரீரங்கத்தில் ஆடிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஹீலிங் அறிமுக நிகழ்ச்சியும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு அந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை எப்படி கையாள்வது என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும்
“தெய்வக்குழந்தை” என்ற தலைப்பில் தலைவர் சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்றது. அந்தநல்லூர் ஒன்றிய கல்வி அலுவலர் மருதநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
வெல்னஸ் ஹீலிங் மையத்தின் நிறுவனர் முகுந்த கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தி குழந்தைகளுக்கு ஹீலிங் தெரபி அறிமுகப்படுத்தினார்.
தலைமை ஆசிரியை பூங்கொடி முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் சேஷாத்ரி நிகழ்ச்சி ஏற்பட்டினை செய்திருந்தார். ஆசிரிய பெருமக்கள், சங்கத்தின் முன்னால் தலைவர்கள் உறுப்பினர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.