சர்வதேச We Love U நல அமைப்பின் சார்பில் 753வது உலகளாவிய இரத்ததான முகாம் உலகளாவிய நல அமைப்பான International We Love U தலைவர் ஜாங் கில்-ஜா அவர்களின் தலைமையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக 11-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் விஜய ஜெயராஜ் மற்றும் உறையூர் பகுதி கழக செயலாளர் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த ரத்ததான முகாமில் சர்வதேச We Love U நல அமைப்பின் உறுப்பினர்கள் 150-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
சர்வதேச We Love u நல்ல அமைப்பு கடந்த 2004 இல் கொரியாவில் தொடங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் ஒரு உலகளாவிய உயிர்காக்கும் இயக்கமாகும். இது 64 நாடுகளில் நடைபெற்றது. இது இரத்தப் பற்றாக்குறையைத் தீர்க்க உதவுவதில் மட்டுமல்லாமல், உலக சுகாதார அமைப்பின் (WHO) குறிக்கோளான தன்னார்வ, ஊதியம் பெறாத இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இரத்த தான கலாச்சாரத்தைப் பரப்புவதிலும் நேர்மறையான பங்கை வகித்து வருகிறது.
மேலும், உலகளாவிய நல அமைப்பான International We Love U தலைவர் ஜாங் கில்-ஜா அவர்கள் அனைத்து தன்னார்வ உறுப்பினர்களையும், குறிப்பாக இந்தியாவில் உள்ளவர்களையும் ஊக்குவிக்க உலகளவில் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். 2021 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் இரண்டு முறை Cleaning moment மற்றும் ஒறு முறை Blood Drive மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் ஒறு முறை Cleaning Moment மற்றும் இரண்டு முறை Blood Drive மற்றும் கோவிட்-19 போன்ற நெருக்கடியான சூழ்நிலையிலும் நடத்தப்பட்டது. மேலும் தலைவர் ஜாங் கில்-ஜாவினி அன்பைப் பரப்ப முயற்சி செய்து உலகம் முழுவதும் தன்னார்வ சேவைகளைச் செய்கிறார், மேலும் வரும் மார்ச் 23ம் தேதி அன்று சென்னை கோயம்பேட்டில் இரத்ததான முகாம் நடைபெறுகிறது. இதில் we love u உறுப்பினர்கள் ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் எப்போதும் தாய்மார்களின் அன்பைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும் திருச்சியில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை சர்வதேச We Love U நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ராகேஷ், மற்றும். பாஸ்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் .