சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ராமநாதபுரத்தில் சேர்ந்த ஆதம் மாலிக் என்ற பயணி எடுத்து வந்த இரண்டு நியூட்டெல்லா சாக்லெட் ஜாரை அதிகாரிகள் சோதனை செய்த போது
அதில் தங்க கட்டியை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவர் எடுத்து வந்த தங்கத்தின் மதிப்பு ரூபாய் 8 லட்சத்து 89 ஆயிரத்து 530 ஆகும் அதன் எடை 149 கிராம். சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து ஆதம் மாலிக்கிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.