சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த நபர் ஒருவருக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது இதனால் உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருந்த காரணத்தால் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என சோதிப்பதற்காக அவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு தான் அவருக்கு குரங்கு அம்மை உள்ளதா இல்லை வேறு எதும் காய்ச்சலா என முழுமையான விவரங்கள் தெரிய வரும் என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *