சிஏஏ, மீத்தேன், எட்டு வழி சாலை, வேளான் திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மீதும் போட பட்ட அனைத்து வழக்குகள் வாபஸ் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக முழுவதும் மக்கள் மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த அ தி மு க அரசு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராடும் மக்களை போராட்ட களத்திலிருந்து கலைக்கும் வகையில் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் போட பட்டு நெருக்கடி கொடுத்து உள்ளது . மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற கோரி சென்னையில் தி மு க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அன்று மாபெரும் பேரணி நடை பெற்றது இதில் மத சார் பற்ற கூட்டணி கட்சிகள் , மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் அதன் தலைவர்கள் தொண்டர்கள் ஏராளமாணோர் கலந்து கொண்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய இந்த பேரணி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது . தமிழக மக்கள் நலனில் முழு கவனம் செலுத்தி மக்களுக்கு தேவையான பல்வேறு நல திட்ட உதவிகள் , கோரோனா நோயாளிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்தல் மேலும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்று கலத்தில் இறங்கி செயலாற்றி வரும் மாண்பு மிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : சிஏஏ,மீத்தேன்,எட்டு வழி சாலை,வேளான் திருத்த சட்டத்தை எதிரித்து போராடியவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதும் போட பட்ட அனைத்து வழக்குகளை வாபஸ் வாங்க படுகிறது என்று நேற்று 24-06-2021 சட்ட பேரவையில் அறிவித்த மாண்பு மிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.