திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா குளிர் அரங்கில் இன்று நடைபெற்றது. சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் தலைப்பில் நடக்கும் 3 நாட்கள் ஓவிய கண்காட்சியில் 33 இளம் ஓவியர்கள் பங்கேற்பில் 133 ஓவியங்கள் இடம்பெற்றன. இந்த ஒவிய கண்காட்சிக்கு டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார். முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார். முதன்மை விருந்தினர்மேனாள் நீதி அரசர் சந்துரு கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்:-, சட்டத்தை மதிக்கும் மாண்பை உருவாக்க வேண்டும் ஒவ்வொருவரும் சட்டத்தை மதிக்க வேண்டும் அவ்வகையில் பாரம்பரிய ஓவியக் கலையில் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் கண்காட்சியில் பங்கேற்ற இளம் ஓவியர்களை பாராட்டுகிறேன் என்றார். ‌

திருச்சிராப்பள்ளி மாவட்ட மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி .மகாலட்சுமி ஓவியர் மனோகர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஒவிய கண்காட்சியில் பங்கேற்ற இளம் ஓவியர்கள் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவிய கண்காட்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை தூரிகை ஓவியத்தில் உயர் பண மதிப்பிழப்பு சட்டம், போக்சோ சட்டம், வன உயிர் பாதுகாப்பு சட்டம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம். கையால் துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுவது தடைச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு நலன் சட்டம் என பல்வேறு தலைப்புகளில் ஓவியங்கள் காட்சிப்படுத்திருந்தனர். முன்னதாக பொற்கொடி வரவேற்க நிறைவாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை யோகா ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *