திருச்சி சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் தலைவரும் அஇஅதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரும் சகாதேவ பாண்டியன் நேற்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் இன்று விடியற்காலை அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.