முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறுகனூர் காவல் நிலையம் சார்பில் லால்குடி கோட்ட டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவலர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் காவல் ஆய்வாளர் சுமதி உதவி காவல் ஆய்வாளர்கள் தனலட்சுமி, சேகர் சாந்தா,மற்றும் காவலர்கள் பொதுமக்கள்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். காவலர்களுக்கு பிரஷர், சுகர், மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகளுக்கான பரிசோதனை நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் மருத்துவர் வினோத், செவிலியர் சுகந்தி, ஸ்ரீராம் செபஸ்டின் மார்க்கெட் மேலாளர் மற்றும் சிறுகனூர் காவலர்கள் பொதுமக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.