திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகமணி பேரூராட்சியில் தமிழக அரசின் திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு பரிசோதனை மேற்கொண்டார்.
மேலும் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் தாசில்தார் செல்வ கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, பேரூராட்சி தலைவர் சிவகாம சுந்தரி, பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜலிங்கம், திமுக நகர செயலாளர் வாசுதேவன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அந்த நல்லூர் ஒன்றிய துணை செயலாளர் மலர் அறிவரசன், கைகுடி சாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராஜவேல், அனலை அபினேஷ், எம்எல்ஏ உதவியாளர் திருச்சி லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.