சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து திருச்சி நீதிமன்றம் அருகல் உள்ள எம்.ஜி.ஆர் சிலை வரை கல்லூரி மாணவ மாணவியர் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிறுதானிய உணவு வகைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலான இந்த விழிப்புணர் பேரணியினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இப்பேரணியில், பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக் கூடாது என்றும், சிறு தானிய உணவுகளே சிரமமற்ற வாழ்வை தரும் என்றும், சோழ உணவே சோம்பலை நீக்கும் என்றும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கல்லூரி மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர்.