திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் கடந்த 16-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் மத்திய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த சுமார் 268 ஆட்டோ டிரைவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதைடுத்து ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்கித் தர வேண்டும் என அதிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதே நேரத்தில் பஞ்சபூரை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளூர் 230 ஆட்டோ டிரைவர்களுக்கு மட்டுமே இடம் ஒதுக்கி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையொட்டி கடந்த 16-ந்தேதி மாநகராட்சி அதிகாரிகள், ஆர்.டி.ஓ , காவல் துறையினருடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஜங்ஷன் பகுதியை சுற்றியுள்ள ஆட்டோ டிரைவர்கள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தின் முன்பகுதியிலும், உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் பேருந்து முனையத்தின் பின் பகுதியிலும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது என முடிவானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தின் முன் பகுதியில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோக்களை விட கூடுதலாக பிற சங்கத்தை சேர்ந்த ஆட்டோக்களை நிறுத்த அதிகாரிகள் வலியுறுத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ சங்கம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் .4 அலுவலகம் (பொன்மலை கோட்ட அலுவலகத்தை, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.அதன்படி பொன்மலை கோட்டை அலுவலகத்தை முற்றையிட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். மாநகராட்சி நகர பொறியாளர் சிவபாதம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து திங்கட்கிழமை தீர்வு காணப்படும் என்றார்.
அதுவரை தற்போது உள்ள நிலையை நீடிக்க வேண்டும்.புதிய ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது என்று ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் பேச்சுவார்த்தையில் ஆட்டோ தொழிலாளர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் கோபிநாத், சிஐடியூ ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், ஏ.ஐ.டி. யு.சி ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், பு.ஜ. தொ.மு.ச மாவட்ட செயலாளர் ஜீவா, ஆட்டோ தொழிலாளர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் கோபி,சி ஐ டி யு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் ஆகிய கலந்து கொண்டனர்.