தேசிய கிராமப்புறசுகாதார திட்டத்தின் கீழ் ஆஷா(ASHA) பணியாளர்கள் விடுப்பின்றி ,ஓய்வின்றி 24 மணி நேரம் கிராம மக்களிடையே பணிபுரிந்து ஒன்றிய மற்றும் மாநில அரசின் அனைத்து சுகாதார திட்டங்களை அமுல்படுத்துவதில் பணியாற்றி வருகின்றனர். கொரனோ பெருந்தொற்று காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி உள்ளனர். இவர்களுக்கான மாதம்தோறும் வழங்கப்படும் சம்பளம் ஊக்கத்தொகையாக ரூபாய் 2000 முதல் 3000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
15 ஆண்டுகளுக்கு மேலாக கிராமப்புற செவிலியர்களுக்கு நிகராக பணியாற்றி வருபவர்களை சுகாதாரத்துறையில் தகுந்த பணிகளில் நிரந்தர படுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் மற்றும் மாதம் ரூபாய் 18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும், அடையாள அட்டை, புறநகர் பேருந்துகளில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசிடம் மற்றும் மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் அவர்களிடமும் நேரில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஏஐடியுசி மாவட்ட துணைத்தலைவர் வெங்கராமுலு தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் தலைவர் நடராஜா துணைச் செயலாளர் ராமராஜ் மற்றும் ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர்.